ஆவிக்குரிய மனிதனின் முக்கிய பண்புகள்
1. ஒரு ஆவிக்குரிய மனிதன், தேவன் ஒருவனை ஆசீர்வதித்திருப்பதின் ஒரே நோக்கம், அவன் பிறரை ஆசீர்வதிக்க என்பது தான்" என்ற உண்மையை அறிந்திருப்பான்.
2. தேவன் அவனுக்கு அதிகமாய் மன்னித்திருக்கிறபடியால், தனக்குத் தீமை செய்த அனைவரையும் மகிழ்ச்சியுடன் உடனடியாக மன்னித்துவிடுவான்.
3. தேவன் அவனுக்கு மிகுந்த நல்லவராக இருந்தபடியால், அவனும் பிறருக்கு நல்லவனாகவே இருப்பான்.
4. அவன் தேவனிடம் இலவசமாய்ப் பெற்றபடியால், மற்றவர்களுக்கும் தான் பெற்ற கிருபா நன்மைகளை இலவசமாய்க் கொடுப்பான்.
5. அவன் மற்றவர்களின் நலன் மீது மிகுந்த கரிசனைக் கொண்டிருப்பான். இழந்தவர்கள் மீதும், துயர் நிறைந்த மானிடர் மீதும், அவன் எப்போதும் மனதுருக்கம் நிறைந்தவனாக இருப்பான். நல்ல சமாரியன் உவமையில் காணும் லேவியனும், ஆசாரியனும் தேவை நிறைந்த ஒரு சகோதரனைப் புறக்கணித்துச் சென்று விட்டது போல், அவனால் முடிவதில்லை! (லூக்கா 10:30-37)
6.வீழ்ச்சியடைந்த மனிதனை சாத்தானின் கட்டுகளிலிருந்து விடுதலை செய்து! அவனுக்கு உதவி செய்யவும், அவனை ஆசீர்வதிக்கவும், அவனைத் தூக்கி நிலை நிறுத்தவும், தேவன் எப்போதும் கரிசனை கொண்டவராகவே இருக்கிறார். இதைப்போன்ற கரிசனையை ஆவிக்குரிய மனிதனும் பெற்றிருப்பான். அவன் தன் எஜமானனைப் போலவே " ஊழியம் கொள்ளாமல் ஊழியம் செய்திடவே" நாடுவான். சாத்தானின் கட்டுகளிலிருந்து ஜனங்களை விடுதலையாக்கி, அவர்களுக்கு நன்மை செய்கிறவராகவே ஆண்டவராகிய இயேசு சுற்றித் திரிந்தார். (அப்போஸ்தலர்.10:38) அவனும் அவ்வாறாகவே நன்மை செய்கிறவனாகவே எப்போதும் திகழ்வான்.
7. அவன், தான் பிறருக்குச் செய்திடும் ஊழியத்திற்காக அவர்களிடமிருந்து யாதொரு பணத்தையோ அல்லது கனத்தையோ தனக்கு ஆதாயமாக ஒரு போதும் தேடமாட்டான். அவன் தேவனைப் போலவே, தன் ஜீவியத்தின் மூலமாகவும் ஊழியத்தின் மூலமாகவும் பிறரை ஆசீர்வதிப்பது ஒன்றையே நாடுவான். ஒருவரிடமிருந்தும் தனக்கென்று அ ல் ல து பரிசுப் பொருளையோ அல்லது காணிக்கையையோ அ வ ன் எதிர்பார்த்திடமாட்டான். ஏனெனில், தன் ஒவ்வொரு தேவைக்கும் தே வனை மாத்திரம் அவன் நம்பியிருப்பான்!
0 கருத்துகள்
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்